2512துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த இக் காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே 36