2513கொடுங் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அரு வினையேன்
நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஒசியும் இடை இளமான் சென்ற சூழ் கடமே 37