2515நீலத் தட வரைமேல் புண்டரீக நெடுந் தடங்கள்
போலப் பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம் பிரான் கண்ணின் கோலங்களே 39