2516கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த
நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேரிழையீர்
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்றுகொலோ? 40