2521பெருங் கேழலார் தம் பெருங் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல்
வருங் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே 45