2523திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து
சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம் கொல் என் மெல்லியற்கே? 47