2531வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே? 55