2533புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே 57