2535அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண்ணம் துழாய்க்கு
உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே 59