முகப்பு
தொடக்கம்
2538
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கருங்கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே? 62