254 | வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அறத் திருவரை விரித்து உடுத்து பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே முல்லை நல் நறுமலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே (2) |
|