2552இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே? 76