2575ஈனச் சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும்
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும
்ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே 99