| 2577 | செக்கர் மா முகில் உடுத்து மிக்க செஞ் சுடர்ப் பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு பல சுடர் புனைந்த பவளச் செவ்வாய் திகழ் பசுஞ் சோதி மரகதக் குன்றம் கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் பீதக ஆடை முடி பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப நச்சு வினைக் கவர்தலை அரவின் அமளி ஏறி எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழ கிடந்த தாமரை உந்தித் தனிப் பெரு நாயக மூவுலகு அளந்த சேவடியோயே (1) |
|