2578 | உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் சுடர்ப் பூந் தாமரை சூடுதற்கு அவாவு ஆர் உயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு அசைவோர் அசைக திருவொடு மருவிய இயற்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? (2) |
|