2579 | குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம் மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை மெய் பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வன் ஆகி சுடர் விளங்கு அகலத்து வரை புரை திரை பொர பெரு வரை வெருவர உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மாத் தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையுங்கொல் ஊழிதோறு ஊழி ஓவாதே? (3) |
|