2580ஊழிதோறு ஊழி ஓவாது வாழிய
என்று யாம் தொழ இசையுங்கொல் யாவகை
உலகமும் யாவரும் இல்லா மேல் வரும்
பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகி
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி
மூவுலகம் விளைத்த உந்தி
மாயக் கடவுள் மா முதல் அடியே?     (4)