2581மா முதல் அடிப் போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து
ஒண் சுடர் அடிப் போது ஒன்று விண் செலீஇ
நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப
வானவர் முறைமுறை வழிபட நெறீஇ
தாமரைக் காடு மலர்க் கண்ணொடு
கனி வாய் உடையதும் ஆய் இரு நாயிறு
ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக் காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே?     (5)