2582ஓஓ உலகினது இயல்வே!
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி
படைத்து இடந்து
உண்டு உமிழ்ந்து அளந்து தேஎர்ந்து உலகு அளிக்கும்
முதல் பெருங் கடவுள் நிற்ப புடைப் பல
தான் அறி தெய்வம் பேணுதல் தனாது
புல்லறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவியுள் நீங்காப்
பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே     (6)