259 | சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த் தன் திருமேனிநின்று ஒளி திகழ நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே கோலச் செந்தாமரைக் கண் மிளிரக் குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே (7) |
|