260 | சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித் திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால் அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரிவளை கழல்கின்றதே (8) |
|