2623வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே
போய்ப் போஒய் வெம் நரகில் பூவியேல் தீப் பால
பேய்த் தாய் உயிர் கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி             (40)