2626அவையம் என நினைந்து வந்த சுரர்பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ
மனத் துயரை மாய்க்கும் வகை?             (43)