2629நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும்
தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத
மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு
நீ கதி ஆம் நெஞ்சே நினை     (46)