263அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்
      தயிர்- வாவியும் நெய்- அளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த
      பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மட மான் கன்றினை
      வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (1)