264வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்
      வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப
      மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி
      இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2)