265அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
      ஆனாயரும் ஆநிரையும் அலறி
எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப
      இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை
தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்
      புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று
கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3)