266கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்
      கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்
அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு
      அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
      கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும்
குடவாய்ப் பட நின்று மழை பொழியும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே             (4)