2667வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத்
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே
தங்கத்தான் ஆமேலும் தங்கு     (84)