2669கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது?     (86)