268 | செப்பாடு உடைய திருமால் அவன் தன் செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள் காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்துவடம் பிறழக் குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (6) |
|