269படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்
      படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
      தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த
      அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்
குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (7)