270சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச்
      சர- மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்
      நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்
      இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (8)