272 | கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும் குடி ஏறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (10) |
|