273அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு
      அரவப்-பகை ஊர்தி அவனுடைய  
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்
      கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்
      திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்
      பரமான வைகுந்தம் நண்ணுவரே             (11)