285ஐய புழுதி உடம்பு அளைந்து இவள்
      பேச்சும் அலந்தலையாய்ச்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன்
      உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறுதூதை யோடு இவள்
      முற்றில் பிரிந்தும் இலள்
பை அரவணைப் பள்ளியானொடு
      கைவைத்து இவள்வருமே             (1)