286வாயிற் பல்லும் எழுந்தில மயி
      ரும் முடி கூடிற்றில
சாய்வு இலாத குறுந்தலைச் சில
      பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள்
      தன் அன்ன செம்மை சொல்லி
மாயன் மா மணிவண்ணன்மேல் இவள்
      மால் உறுகின்றாளே             (2)