287பொங்கு வெண்மணல் கொண்டு சிற்றிலும்
      முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும்
      அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில
      கோவிந்தனோடு இவளைச்
சங்கை யாகி என் உள்ளம் நாள்தொறும்
      தட்டுளுப்பு ஆகின்றதே             (3)