2870இவையும் அவையும் உவையும்
      இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுளே
      ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான்
      கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன்
      என்னுடைச் சூழல் உளானே   (1)