2872அருகல் இலாய பெரும் சீர்
      அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன் மேனி
      வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
      பூமகளார் தனிக் கேள்வன்
ஒருகதியின் சுவை தந்திட்டு
      ஒழிவு இலன் என்னோடு உடனே   (3)