2874ஒக்கலை வைத்து முலைப் பால்
      உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக அன்று அவள்பால்
      உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும்
      இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோற்றிய ஈசன்
      மாயன் என் நெஞ்சின் உளானே   (5)