2875மாயன் என் நெஞ்சின் உள்ளான்
      மற்றும் எவர்க்கும் அதுவே
காயமும் சீவனும் தானே
      காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும்
      சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன்
      என்னுடைத் தோளிணையானே     (6)