2876தோள் இணை மேலும் நன் மார்பின்
      மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த
      தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான்
      கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான்
      என்னுடை நாவின் உளானே   (7)