2878கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
      காண்பன் அவன் கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்
      ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக்
      கண்ணுதலானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தொடு உலகம்
      ஆக்கி என் நெற்றி உளானே   (9)