288ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என்
      பெண்மகளை எள்கி
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த
      சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன்
ஆழியான் என்னும் ஆழ மோழையில்
      பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாது என்னும்
      மூதுரையும் இலளே             (4)