2880உச்சியுள்ளே நிற்கும் தேவ
      தேவற்குக் கண்ண பிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி
      வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன ஆயிரத்துள்ளே
      இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய
      நீள் கழல் சென்னி பொருமே   (11)