2886நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே     (6)