289நாடும் ஊரும் அறியவே போய்
      நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம்
      சோதித்து உழிதர்கின்றாள்
கேடு வேண்டுகின்றார் பலர் உளர்
      கேசவனோடு இவளைப்
பாடிகாவல் இடுமின் என்று என்று
      பார் தடுமாறினதே             (5)