290பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள்
      பாடகமும் சிலம்பும்
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு
      என்னோடு இருக்கலுறாள்
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள்
      பூவைப் பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே             (6)