291பேசவும் தரியாத பெண்மையின்
      பேதையேன் பேதை இவள்
கூசமின்றி நின்றார்கள் தம் எதிர்
      கோல் கழிந்தான் மூழையாய்
கேசவா என்றும் கேடிலீ என்றும்
      கிஞ்சுக வாய் மொழியாள்
வாச வார்குழல் மங்கைமீர் இவள்
      மால் உறுகின்றாளே 7